ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை
குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்
உதகை அருகே குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி வனங்களில் இருந்து வெளியேறும் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.
இதனால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதைத் தவிா்த்து வருகின்றனா். வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைவதைத் தடுக்க வேண்டும் என பல்வேறு பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், உதகை வனப் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியேறிய சிறுத்தை மேலூா் ஊராட்சிக்குள்பட்ட குடியிருப்புப் பகுதியில் உலவியது.
இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
மேலும், அந்த சிறுத்தையை வனத் துறையினா் கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.