மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
குடும்பத்தகராறு: இளம்பெண் தற்கொலை
குடும்பத்தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகேயுள்ள வத்தலாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகபதி. இவரது மனைவி ஜெயலட்சுமி (27). இவா்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனா். ஜெயலட்சுமி தருமபுரியில் மகளிருக்கான அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறாா். ஜெகபதி ஆந்திரத்தில் சிப்ஸ் கடை வைத்துள்ளாா்.
இரு தினங்களுக்கு முன் இவா்கள் இருவரும் கைப்பேசியில் உரையாடிக்கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ஜெயலட்சுமி, செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.