செய்திகள் :

குடும்பத்துடன் தாயகத்தை விட்டு வெளியேறிய முன்னாள் அதிபர்! அங்கோலாவில் தஞ்சம்!

post image

மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காபோன் நாட்டின் முன்னாள் அதிபர் தனது குடும்பத்துடன் அந்நாட்டை விட்டு வெளியேறி அங்கோலாவில் தஞ்சமடைந்துள்ளார்.

காபோன் நாட்டின் முன்னாள் அதிபரான அலி போங்கோ ஒண்டிம்பாவின் ஆட்சி கடந்த 2023-ம் ஆண்டு ராணுவப் புரட்சியின் மூலம் கவிழ்க்கப்பட்டது. அந்நாட்டின், ராணுவ உயர் அதிகாரியான ஜெனரல் பிரைஸ் ஒலிகுய் நுகுமாவின் தலைமையிலான இந்தப் புரட்சியினால் முன்னாள் அதிபர் போங்கோ மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின்னர், அதிபர் போங்கோ வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட நிலையில் அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரும் தலைநகர் லிப்ரவில்லில் அமைந்துள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலின் மூலம் ஜெனரல் பிரைஸ் ஒலிகுய் நுகுமா அந்நாட்டின் அதிகாரப்பூர்வ அதிபரானார். பின்னர், அங்கோலா அதிபர் ஜோனோ லுரென்சோ மற்றும் அதிபர் நுகுமா ஆகியோருக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் முன்னாள் அதிபர் போங்கோ மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், விடுதலையான அவரது குடும்பத்தினர் காபோன் நாட்டைவிட்டு வெளியேறி அங்கோலாவின் தலைநகர் லுவாண்டாவை அடைந்துள்ளதாக அதிபர் ஜோனோ லுரென்சோவின் அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காபோனின் முன்னாள் பிரதமரும், போங்கோ குடும்பத்தினரின் செய்தித்தொடர்பாளருமான அல்யின் க்ளவுடி பில்லி கூறுகையில், சட்டவிரோதமான முறையில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அதிபர் பாங்கோவின் குடும்பத்தினர் சர்வதேச நாடுகளின் வலியுறுத்தலினால் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளாதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சுமார் 23 லட்சம் மக்கள் வாழும் காபோன் நாட்டை அதிபர் போங்கோவின் குடும்பத்தினர் 54 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தனர். கடந்த 2023-ம் ஆண்டு ஏற்பட்ட ராணுவப் புரட்சியின் மூலம் கபோனின் குடியரசுப் பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைவர் பிரைஸ் ஒலிகுய் நுகுமாவின் தலைமையிலான ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மீண்டும் தலைத்தூக்கும் கரோனா? சிங்கப்பூர், ஹாங்காங்கில் அதிகரிக்கும் பாதிப்புகள்!

34வது அரபு லீக் உச்சி மாநாடு: ஐ.நா. பொதுச் செயலாளருடன் ஈராக் அதிபர் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரை, ஈராக் அதிபர் அப்துல் லத்தீஃப் ரஷீத் சந்தித்துள்ளார். ஈராக்கில் நடைபெறும் 34வது அரபு லீக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபை பொதுச் செயலாளர் அண... மேலும் பார்க்க

இந்தோனேசியா: மோதலில் 20 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பதற்றம் நிறைந்த பப்புவா பகுதியில் கிளா்ச்சியாளா்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 18 கிளா்ச்சியாளா்கள், இரண்டு காவலா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள்... மேலும் பார்க்க

‘பட்டினிச் சாவு அபாயத்தில் 30 கோடி போ்’

உலகளவில் 29.53 போ் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளதாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட 16 தன்னாா்வல அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சா்வதேச உணவுப் பற்றாக... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பகை நல்லதல்ல: டிரம்ப்

அண்டை நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே பகை அதிகரிப்பது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். ‘இவ்விரு நாடுகள் இடையிலான பதற்றத்தைத் தணிக்க நான் மத்தியஸ்தம் செய்தே... மேலும் பார்க்க

சமூக வலைதள ‘போலி செய்தியை’ நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் அமைச்சா்!

பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழில் பாகிஸ்தான் விமானப் படையைப் புகழ்ந்து கட்டுரை வெளியானதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் கூறியத... மேலும் பார்க்க

எவரெஸ்ட் மலையேற்றம்: இந்தியர் உள்பட 2 வீரர்கள் பலி!

நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் 2 வீரர்கள் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமய மலைத்தொடர்களில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் ஏறிய இந்தியா மற்றும் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 வீரர்கள் ப... மேலும் பார்க்க