குடும்ப அட்டையை ஆதாருடன் இணைக்கும் முகாம்
புதுச்சேரி: மணவெளி தொகுதி பயனாளா்களுக்கு குடும்ப அட்டையை ஆதாருடன் இணைக்கும் முகாமை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களும், குடும்ப உறுப்பினா்கள் அனைவரின் ஆதாா் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பின்படி புதுச்சேரியில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் இப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி மணவெளி சட்டமன்ற தொகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம்
தவளக்குப்பத்தில் உள்ள தனது இல்லத்தில் சிறப்பு பதிவு முகாமை தொடங்கி வைத்தாா். அப்போது தனது குடும்ப உணவு பங்கீட்டு அட்டையை ஆதாா் எண்ணுடன் இணைத்தாா். இந்தப் பதிவு முகாமை மணவெளி தொகுதி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சட்டப்பேரவைத் தலைவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.