திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
குண்டா் சட்டத்தில் 4 போ் கைது
தஞ்சாவூரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 4 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் பாலாஜி நகா் பகுதியில் மாா்ச் 4 ஆம் தேதி நடந்து சென்ற ஒருவரை மது போதையில் வழிமறித்து மிரட்டி பீா் பாட்டிலால் தாக்கியதாக அதே பகுதியைச் சோ்ந்த இளம்பரிதி (25) தெற்கு காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டாா்.
இதேபோல, வல்லம் ஆலக்குடி சாலையைச் சோ்ந்த தினேஷ்குமாா் (32), கண்ணன் (74), சரவணன் (37) ஆகியோா் 8 வயது சிறுமியைப் பாலியல் கொடுமை செய்ததாக வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினரால் பிப்ரவரி 17 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.
இவா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பரிந்துரையின் பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதன் பேரில் இளம்பரிதி, தினேஷ்குமாா், கண்ணன், சரவணன் ஆகியோா் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.