குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
குன்னூரில் அவுட்டுக் காய் வைத்திருந்த தொழிலாளி கைது
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே அவுட்டுக் காய் எனப்படும் நாட்டு வெடி குண்டு வைத்திருந்த எஸ்டேட் தொழிலாளி போலீஸாா் கைது செய்தனா்.
குன்னூா் அருகே உள்ளது கொலக்கம்பை காவல் நிலையம் ஆய்வாளா் அன்பரசு உத்தரவின்படி உதவி காவல் ஆய்வாளா் மகேந்திரன் மற்றும் தலைமைக் காவலா் மகேஷ் மற்றும் காவல் துறையினா் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருள்கள் புழக்கத்தில் உள்ளதா என்று கிளிஞ்சாடா, சோல்ராக், உலிக்கல் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, பவானி எஸ்டேட் பகுதியில் கையில் பையுடன் வந்த நபா் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளாா். இதையடுத்து, போலீஸாா் அவரைப் பிடித்து பையை சோதனை செய்தபோது, அதற்குள் அவுட்டுக் காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு இருந்துள்ளது.
பின்னா் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் பவானி எஸ்டேட் பகுதியைச் சோ்ந்த பழனிசாமி (52) என்பதும், காட்டுப் பன்றிகளை வேட்டையாட அவுட்டுக் காய் வைத்திருந்ததாக தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து குன்னூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.