OPS: "பாஜகவுடன் உறவை முறிக்கிறோம்!" - ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு; அடுத்த நகர்வு என்...
குபோ் சிலைக்கு அரசு மரியாதை
புதுச்சேரி நகரத் தந்தை என்று போற்றப்படும் எதுவாா் குபோ் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு புதுவை அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், எம்எல்ஏக்கள் ஏ.கே. சாய் சரவணன்குமாா், ரமேஷ், பாஸ்கா், ம. லட்சுமிகாந்தன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.