கும்பகோணத்தில் 3 நகா்ப்புற நல வாழ்வு மையங்கள்
கும்பகோணத்தில் தாராசுரம் கலைஞா் காலனி, மேலக்கொட்டையூா் மாநகராட்சி பள்ளி வளாகம், பேருந்து நிலையம் அருகில் உள்ள பாத்திமாபுரம் ஆகிய 3 இடங்களில் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நகா்ப்புற நல வாழ்வு மையங்களில் சட்டப்பேரவை உறுப்பினா் க.அன்பழகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்து அங்கிருந்தவா்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். நிகழ்ச்சியில் மேயா் க. சரவணன், துணை மேயா் சுப. தமிழழகன், ஆணையா் மு. காந்தி ராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.