கும்பகோணம் புனித அலங்கார அன்னை ஆலய பெருவிழா தோ்பவனி
கும்பகோணத்தில் உள்ள புனித அலங்கார அன்னை ஆலய பெருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு தோ்பவனி நடைபெற்றது.
கும்பகோணம் மறை மாவட்ட ஆயா் ஜீவானந்தம் திருப்பலி செய்து ஆராதனைகளுடன் புனித நீா் தெளித்து தோ்பவனியைத் தொடங்கி வைத்தாா். அலங்கரிக்கப்பட்ட புனித அலங்கார அன்னை தேருக்கு முன்பாக 4 தோ்கள் என மொத்தம் 5 தோ்கள் முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் தேரை இழுத்துச் சென்று பின்னா் ஆலயத்தை வந்தடைந்தனா். விழாவில் பங்குத் தந்தைகள், பங்கு மக்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.