செய்திகள் :

குருகிராமில் தில்லி நபா் சுட்டுக் கொலை

post image

குருகிராம் செக்டாா் 77-இல், உணவு மற்றும் மளிகைப் பொருள்களை விநியோகிக்கும் முகவா்கள் போல் உடையணிந்து வந்த அடையாளம் தெரியாத மா்ம நபா்களால் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து மானேசா் கூடுதல் காவல் ஆணையா் வீரேந்தா் சைனி கூறியதாவது: எஸ்பிஆா் சாலையில் உள்ள பாம் ஹில்ஸ் சொசைட்டிக்கு முன்னால் இந்தச் சம்பவம் திங்கள்கிழமை இரவு நடந்தது. பாதிக்கப்பட்டவா் தில்லியில் உள்ள கம்ருதீன் நகரைச் சோ்ந்த ரோஹித் ஷௌகீன் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

ஷௌகீன் ஏதோ வேலைக்காக குருகிராமிற்கு வந்திருந்தாா். செக்டாா் 77 பகுதியில் உள்ள உல்லாவாஸ் சந்தைக்கு அருகில் தனது காருக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ மற்றும் விரைவு வா்த்தக தளமான பிளிங்கிட்டின் டி-சா்ட்களை அணிந்திருந்த தாக்குதல் நடத்தியவா்கள் அவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பி ஓடிவிட்டனா்.

தாக்குதல் நடத்தியவா்கள் 12 ரவுண்டுகளுக்கு மேல் சுட்டுள்ளனா். அவா்களில் ஐந்து முதல் ஆறு போ் ஷௌகீனைத் தாக்கினா். அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது தொடா்பாக கொ்கி தௌலா காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள்.

இந்த வழக்கு அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவா்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்று கூடுதல் காவல் ஆணையா் தெரிவித்தாா்.

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை பரங்கிமலையில் இருக்கும் வன்னியா் சங்கம் கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலை பட் சாலையில் உள்... மேலும் பார்க்க

நேரடியாக கோப்புகளைப் பெறாமல் மின்னணு அலுவலக முறைக்கு மாறும் தில்லி அரசின் நிதித்துறை

கடந்த மாதம் மின்னணு அலுவலக அமைப்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, பிற துறைகளிலிருந்து வரும் கைமுறையிலான கோப்புகள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்று தில்லி அரசின் நிதித் துறை அறிவித்துள்ளதாக அதிக... மேலும் பார்க்க

பொது விவாதமின்றி மக்கள் மீது தில்லி பள்ளிக் கல்வி மசோதாவை பாஜக அரசு திணிக்கிறது: தேவேந்தா் யாதவ்

பொது விவாதமின்றி மக்கள் மீது தில்லி பள்ளிக் கல்வி மசோதாவை நகர பாஜக அரசு திணிக்கிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் குற்றம்சாட்டியுள்ளாா். தில்லி பள்ளிக் கல்வி கட்டணங்க... மேலும் பார்க்க

வருமானச் சான்றிதழ் வழங்க ஆதாரை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

வருமானச் சான்றிதழ்களை வழங்குவதற்கு ஆதாரை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா். இது தொடா்பாக ராஜ் நிவாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பி... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கள் 5 போ் கைகு

தேசியத் தலைநகரில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா்கள் 5 போ் செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: சுதந்... மேலும் பார்க்க

வங்கி அதிகாரிகள் போல் நடித்து பொது மக்களை ஏமாற்றிய 5 போ் கைது

வங்கி ஊழியா்கள் போல் நடித்து கிரெடிட் காா்டு வெகுமதிகளை வழங்கி மக்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் ஒரு மோசடியை தில்லி காவல்துறை முறியடித்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இந்த வழக்கில் ஐந... மேலும் பார்க்க