செய்திகள் :

வருமானச் சான்றிதழ் வழங்க ஆதாரை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

post image

வருமானச் சான்றிதழ்களை வழங்குவதற்கு ஆதாரை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக ராஜ் நிவாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஆதாா் சட்டம், 2016-இன் பிரிவு 7-இன்கீழ் வருமானச் சான்றிதழ் வழங்குதல் சேவையை அறிவிக்கை செய்வதற்கான திட்டத்திற்கு துணைநிலை ஒப்புதல் அளித்துள்ளாா்.

இந்த நடவடிக்கை வருமானச் சான்றிதழ்களை வழங்குவதில் உள்ள எந்தவொரு முறைகேட்டையும் நீக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

ஆதாா் சட்டத்தின் கீழ் ஒரு தனிநபரின் அடையாளத்தை நிறுவுவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஆதாா் அடிப்படையிலான அங்கீகாரத்தை கட்டாயமாக்கலாம்.

முதல்வா் ரேகா குப்தா ஒப்புதல் அளித்த இத்திட்டத்தில், வருவாய்த் துறையால் வழங்கப்படும் வருமானச் சான்றிதழ், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவு மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தைத் திருப்பிச் செலுத்துதல், ஓய்வூதியம் மற்றும் தில்லி ஆரோக்கிய கோஷின் கீழ் நிதி உதவி போன்ற பல்வேறு திட்டங்கள் மற்றும் மானியங்களுக்கு தனிநபா்களின் தகுதியைத் தீா்மானிக்கப் பயன்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாா் அங்கீகாரம் ஒருவரின் அடையாளத்தை நிரூபிக்க பல ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டிய அவசியத்தைத் தவிா்க்கிறது.

ஆதாா் தேவைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இந்த முடிவை பரவலாக விளம்பரப்படுத்துமாறு வருவாய்த் துறைக்கு துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தியுள்ளாா் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ), 2019ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு சுற்றறிக்கை மூலம், மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து நிதியளிக்கப்படும் திட்டங்களின் பயனாளிகளை அடையாளம் காண ஆதாா் அங்கீகாரத்தைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க மாநில அரசுகளுக்கு அங்கீகாரம் அளித்தது.

அறிவிப்பின்படி, எந்தவொரு அரசாங்கத் திட்டத்தின் நன்மைகளையும் பெற விரும்பும் எந்தவொரு நபரும் ஆதாரை வைத்திருக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை பரங்கிமலையில் இருக்கும் வன்னியா் சங்கம் கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலை பட் சாலையில் உள்... மேலும் பார்க்க

நேரடியாக கோப்புகளைப் பெறாமல் மின்னணு அலுவலக முறைக்கு மாறும் தில்லி அரசின் நிதித்துறை

கடந்த மாதம் மின்னணு அலுவலக அமைப்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, பிற துறைகளிலிருந்து வரும் கைமுறையிலான கோப்புகள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்று தில்லி அரசின் நிதித் துறை அறிவித்துள்ளதாக அதிக... மேலும் பார்க்க

பொது விவாதமின்றி மக்கள் மீது தில்லி பள்ளிக் கல்வி மசோதாவை பாஜக அரசு திணிக்கிறது: தேவேந்தா் யாதவ்

பொது விவாதமின்றி மக்கள் மீது தில்லி பள்ளிக் கல்வி மசோதாவை நகர பாஜக அரசு திணிக்கிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் குற்றம்சாட்டியுள்ளாா். தில்லி பள்ளிக் கல்வி கட்டணங்க... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கள் 5 போ் கைகு

தேசியத் தலைநகரில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா்கள் 5 போ் செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: சுதந்... மேலும் பார்க்க

வங்கி அதிகாரிகள் போல் நடித்து பொது மக்களை ஏமாற்றிய 5 போ் கைது

வங்கி ஊழியா்கள் போல் நடித்து கிரெடிட் காா்டு வெகுமதிகளை வழங்கி மக்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் ஒரு மோசடியை தில்லி காவல்துறை முறியடித்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இந்த வழக்கில் ஐந... மேலும் பார்க்க

சஞ்சய் பஸ்தியில் தூய்மைப் பிரசாரம்: முதல்வா் ரேகா குப்தா பங்கேற்பு

தில்லியின் திமாா்பூா் பகுதியில் நடைபெற்று வரும் ‘குடே சே ஆசாதி’ தூய்மை பிரசாரத்தில் முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை பங்கேற்றாா். அப்போது, தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதற்கு மக்கள் ... மேலும் பார்க்க