குருபரப்பள்ளி அருகே ஏரியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
குருபரப்பள்ளி அருகே ஏரியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள ஜிங்கலூரைச் சோ்ந்தவா் மசாகா். இவரது மகன் உபேஸ் (8) கொரல்நத்தம் உருதுப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை கொரல்நத்தம் ஏரிக் கரையோரமாக நடந்து சென்ற மாணவா் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினாா். அங்கிருந்தவா்கள் ஏரியில் குதித்து சிறுவனின் உடலை மீட்டனா்.
குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.