செய்திகள் :

குறைபிரசவத்தில் பிறந்து இறந்த குழந்தை; குப்பையில் வீசிய உறவினர்கள்; நாய்கள் கடித்து குதறிய கொடூரம்!

post image

உத்தரப்பிரதேச மாநிலம், லலித்பூர் என்ற இடத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்தது. இதனால் குழந்தை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் குழந்தை இறந்து போனது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் குழந்தையின் உடலை அதன் உறவுக்கார பெண் ஒருவரிடம் ஒப்படைத்திருந்தனர். ஆனால் அக்குழந்தையின் உடல் மருத்துவமனை வளாகத்தில் இருந்த மைதானத்தில் கிடந்தது. அதனை தெருநாய்கள் கடித்துத் தின்று கொண்டிருந்தன. இதனை பார்த்த பொதுமக்கள் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

குழந்தை

உடனே காவலர்கள் ஓடி வந்து நாயை விரட்டினர். அதற்குள் நாய்கள் குழந்தையின் தலையை தின்று இருந்தன. போலீஸாருக்கு தகவல் கொடுக்கும் முன்பாக குழந்தையின் உடல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இச்சம்பவம் நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து விசாரிக்க மருத்துவமனை நிர்வாகம் நான்கு பேர் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்திருக்கிறது.

இச்சம்பவம் குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி மீனாட்ஷி சிங் கூறுகையில், ''குழந்தை பிறக்கும்போது தலை சரியாக வளர்ச்சியடையவில்லை. முதுகு தண்டு பகுதியும் இல்லாமல் இருந்தது. இதய துடிப்பும் குறைவாக இருந்தது. இதனால் குழந்தை பிழைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. பிறந்த நாள் மாலையில் குழந்தை இறந்துவிட்டது. இதையடுத்து அதன் உடல் குழந்தையின் சித்தியியிடம் கைரேகை பெற்றுக்கொண்ட பிறகு கொடுக்கப்பட்டது.

உறவினர்கள் குழந்தையின் உடலை பிளாஸ்டிக் பேக்கில் வைத்து குப்பை தொட்டியில் போட்டிருக்க வேண்டும். குழந்தையின் உடம்பில் மருத்துவமனை டேக் இருந்தது. அதன் மூலம் மருத்துவமனையில் பிறந்த குழந்தை என்று அடையாளம் காணப்பட்டது'' என்று தெரிவித்தார். இம்மருத்துவமனையில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

"சிகிச்சையே வேண்டாம்னு திரும்பி வந்துட்டேன்" - மருத்துவமனையில் நடந்ததை விவரிக்கும் கஞ்சா கருப்பு

நடிகர் கஞ்சா கருப்பு இன்று காலை சென்னை போரூரில் உள்ள மாநகராட்சி சமுதாய நல மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்ற போது மருத்துவர்கள் பணியில் இல்லை எனக்கூறி ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் மாநகராட்சி மருத்... மேலும் பார்க்க

பீகார்: மனைவியைப் பழிவாங்கச் சாலை விதிகளை மீறிய நபர்; காரணம் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறை!

மனைவியைப் பிரிந்து வாழும் கணவர், மனைவியின் வண்டியை எடுத்துக்கொண்டு வேண்டுமென்றே போக்குவரத்து விதிகளை மீறி மனைவியைத் தண்டத்தொகை செலுத்த வைத்துள்ளார்.பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த பெண், தான் செய்... மேலும் பார்க்க

பெங்களூரு விமான கண்காட்சி: வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய இந்திய விமானப்படை - Photo Album

விமான படையினர் சாகச நிகழ்ச்சிகள்விமான படையினர் சாகச நிகழ்ச்சிகள்விமான படையினர் சாகச நிகழ்ச்சிகள்விமான படையினர் சாகச நிகழ்ச்சிகள்விமான படையினர் சாகச நிகழ்ச்சிகள்விமான படையினர் சாகச நிகழ்ச்சிகள்விமான பட... மேலும் பார்க்க

Kumbh Mela: குடியரசுத் தலைவர் வருகையால் திணறிய உ.பி; 300 கிமீ தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் நடந்து வரும் கும்பமேளாவால் உத்தரப்பிரதேசம் திணறி வருகிறது. ஒட்டுமொத்த நிர்வாகமும் கும்பமேளா நடைபெறும் இடத்தில் பணியாற்றி வருகிறது. அப்படி இருந்தும் மெளனி அமாவாச... மேலும் பார்க்க

`அபிஷேக்-க்கு இருக்கும் உரிமை அவருக்கும் இருக்கிறது..!’ - சொத்தை பிரிப்பது பற்றி அமிதாப் சொல்வதென்ன?

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில், அதாவது 1990களின் இறுதியில் கடன் தொல்லையால் கஷ்டப்பட்டார். சொந்தமாக திரைப்படங்கள் தயாரித்து தோல்வி அடைந்தார். அதன் பிறகு கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி நடத்... மேலும் பார்க்க