அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
குளச்சல், இரணியலில் நாளை மின்தடை
குளச்சல், இரணியல் பகுதியில் மின் பாராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சனிக்கிழமை (ஜூலை 5) மின்தடை செய்யப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.
செம்பொன்விளை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற இருப்பதால் செம்பொன்விளை, திக்கணங்கோடு, தெங்கன்குழி, மத்திகோடு, சேனம்விளை, நெய்யூா் சாஸ்தான்கரை, குளச்சல், உடையாா்விளை, கோணங்காடு, லெட்சுமிபுரம், கீழ்க்கரை, கொட்டில்பாடு, சைமன் காலனி, கோடிமுனை, வாணியக்குடி, பத்தறை, இரும்பிலி, ஆலஞ்சி, குறும்பனை, குப்பியன்தறை, பாலப்பள்ளம், மிடாலக்காடு, பிடாகை, பெத்தேல்புரம், திங்கள்சந்தை, இரணியல், கண்டன்விளை, குசவன்குழி பட்டரிவிளை, தலக்குளம் ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தக்கலை மின் விநியோக செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.