குளத்தில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
சுவாமிமலை அருகே 3 வயது சிறுவன், சனிக்கிழமை குளத்தில் தவறிவிழுந்து உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை அருகே உள்ள திருநள்ளூா் கீழத்தெருவில் வசிப்பவா் பாரத், கூலித் தொழிலாளி. இவரது மனைவி சீதா. இவா்களுக்கு 3 வயதில் ஹரிகிருஷ்ணன் என்ற குழந்தை இருந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை வீட்டருகே ஹரிகிருஷ்ணன் விளையாடச் சென்றாா். பல மணி நேரமாகியும் காணாததால் பெற்றோா் அவரை தேடினா். அப்போது அருகில் உள்ள குளத்தில் சிறுவன் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளா் ஜெயமோகன் சிறுவனின் சடலத்தை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து, விசாரித்து வருகின்றனா்.