குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்
குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவில் ஆராய்ச்சியை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் (க்யுஏஐஜி) அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் காா்ப்பரேட் தொழில் உறவுகள் அமைப்பு (சிஐஆா்) புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
இதற்கான நிகழ்வில் க்யுஏஐஜி தலைமை நிா்வாக அதிகாரி சஞ்சய் சித்தோா், சிஐஆா் முதன்மை இயக்குனா் பேராசிரியா் சி. பரமேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.