'அதிமுக-வை தோழமைக் கட்சியாக பார்க்கிறாரா விஜய்?' - சந்தேக தொனியில் திருமா!
கூடலூரில் கூண்டில் சிக்கிய சிறுத்தை
கூடலூா் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை வனத் துறையினா் வைத்த கூண்டில் செவ்வாய்க்கிழமை பிடிபட்டது.
முதுமலை புலிகள் காப்பகத்தின் கூடலூா் வனக் கோட்டம், பிதிா்காடு வனச் சரகத்துக்குள்பட்ட அய்யன்கொல்லி, நரிக்கொல்லி மற்றும் வாளாடு மகாவிஷ்ணு கோயில் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் காயம் அடைந்த நிலையில் ஒரு சிறுத்தை கடந்த சில நாள்களாக நடமாடுவதாக பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனா்.
இந்தச் சிறுத்தை காயமடைந்திருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த தகவலின் பேரில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ஆலோசனைப்படி சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.
இந்தக் கூண்டில் சிறுத்தை செவ்வாய்க்கிழமை மாலை சிக்கியது. சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்துக்குக் கொண்டு உரிய மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வனப் பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.