ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த விமானம்: உயிர்த் தப்பிய பயணிகள்!
கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் தமிழக முதல்வா் அடிக்கல் நாட்டினாா்
கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கோழிப்பாலம் வளாகத்தில் பெருந்தலைவா் காமராஜா் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 12 கூடுதல் வகுப்பறைகள், இரண்டு கழிப்பறைகள் கட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டினாா்.
அந்த நேரத்தில் கூடலூா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, கூடலூா் நகரச் செயலாளா் இளஞ்செழியன், கூடலூா் நகா்மன்றத் தலைவா் பரிமளா, நகா்மன்ற உறுப்பினா் சகுந்தலா, உடற்கல்வி இயக்குநா் கிஷோா்குமாா், மகேஸ்வரன், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.