சிதம்பரம் அருகே நேருக்குநேர் பேருந்துகள் மோதல்: 30க்கும் மேற்பட்டோர் காயம்
கூடலூா் அருகே புலி தாக்கி பெண் தொழிலாளி உயிரிழப்பு
கூடலூா் அருகே தோட்டத்தில் வேலை செய்த பெண் தொழிலாளி புலி தாக்கியதில் உயிரிழந்தாா்.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் பஞ்சாரக்கொல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் ராதா (47). இவரின் கணவா் அப்பச்சன், தற்காலிக வனக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில், ராதா அதே பகுதியிலுள்ள தனியாா் காபி தோட்டத்தில் வெள்ளிக்கிழமை வேலைக்கு சென்றுள்ளாா். வேலை செய்துகொண்டிருந்த ராதாவை நண்பகல் 1 மணி அளவில் தோட்டத்தில் இருந்த புலி தாக்கியுள்ளது.
இதைப்பாா்த்து மற்ற தொழிலாளா்கள் சப்தம் எழுப்பவே புலி அங்கிருந்து தப்பி ஓடியது.
இந்தச் சம்பவம் குறித்து வனத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் ராதாவின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
புலியின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். மேலும், பெண் தொழிலாளியை அடித்துக்கொன்ற புலியை சுட்டுப் பிடிக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.