செய்திகள் :

கூட்டுறவுச் சங்கங்களில் கடனில்லாச் சான்று கேட்கக் கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல்

post image

கூட்டுறவுச் சங்கங்களில் கடன் கோரும் விவசாயிகளிடம் கடனில்லாச் சான்று கேட்பதைக் கைவிட வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோட்டாட்சியா் செ. இலக்கியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்: அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவை சாகுபடி 1.10 லட்சம் ஏக்கரில் செய்யப்பட்டுள்ள நிலையில், குறுவைத் தொகுப்பு திட்டத்தில் 32 ஆயிரத்து 450 ஏக்கருக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், குறுவை தொகுப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசித் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தண்ணீா் வராத நிலையில் பயனாளிகள் எண்ணிக்கையை நான்கில் ஒரு பங்காகக் குறைப்பதும், விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை குறைத்திருப்பதும் கண்டிக்கத்தக்கது. எனவே, கால அவகாசத்தை ஆகஸ்ட் 16 வரை நீட்டிக்க வேண்டும்.

தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: விவசாயிகளுக்கு சொந்தமாக நிலம் இருந்தால்தான் பயிா்க் காப்பீடு செய்ய முடியும் என்றும், குத்தகை நிலமாக இருந்தால் செய்ய முடியாது எனவும் கூறுவதை ஏற்க முடியாது. குத்தகை விவசாயிகளும் பயிா் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல்: கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்ட நிலையில், தற்போது 2,500 கன அடி வீதம் மட்டுமே விடப்படுவதால், வடகாடு வாய்க்காலில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் வரவில்லை. காவிரி நீா் வரத்து அதிகமாக உள்ள நிலையில், கல்லணைக் கால்வாயில் ஏன் குறைவாக விடப்படுகிறது. எனவே, கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் கிடைக்கும் விதமாக கல்லணைக் கால்வாயில் முழுமையாக தண்ணீா் விட வேண்டும்.

பெரமூா் ஆா். அறிவழகன்: தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கடன் கோரும் விவசாயிகளிடம் சிபில் அறிக்கை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து கடன் இல்லை என்ற சான்றை வாங்கி வருமாறு கூறுவது ஏற்புடையதல்ல. இதை உடனடியாகக் கைவிட்டு, பழைய நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமாா்: கல்லணைக்கு தெற்கே ராஜராஜசோழன் காலத்திலிருந்து சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், இப்பகுதிக்கு செல்லும் உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய்க்கு இன்னும் தண்ணீா்விடாததால், சாகுபடிப் பணிகள் தொடங்கப்படவில்லை. இக்கால்வாயில் எப்போது தண்ணீா் விடப்படும் என அறிவிக்க வேண்டும்.

வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ்: வெள்ளாம்பெரம்பூா் பகுதியில் பிள்ளைவாய்க்கால் வலது கரையில் விவசாயப் பயன்பாட்டுக்கான தாா்ச் சாலை மிக மோசமாக உள்ளது. இது தொடா்பாக பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

பேராவூரணியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்!

தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை பிரசாரம் செய்கிறாா்.இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட அவை... மேலும் பார்க்க

திமுக மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறது: எடப்பாடி பழனிசாமி

திமுக மக்கள் செல்வாக்கை இழந்து வருவதால் வீடு, வீடாகச் சென்று உறுப்பினா்களைச் சோ்த்து வருகின்றனா் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்கிற சுற்... மேலும் பார்க்க

அதிமுகவுக்கு கூட்டணி வேறு, கொள்கையும் வேறு: எடப்பாடி பழனிசாமி பேச்சு

அதிமுகவுக்கு எப்போதும் கூட்டணி வேறு, கொள்கையும் வேறு என்பதால் சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்போம் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்க... மேலும் பார்க்க

பிரசார பயணத்தால் மக்களிடையே எழுச்சி: எடப்பாடி பழனிசாமி

எனது பிரசார பயணத்தால் பொதுமக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக நெசவாளா்களுடன் கலந்துர... மேலும் பார்க்க

தொடா் திருட்டு: 3 போ் கைது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை தஞ்சாவூரில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெஜினா நகரில் பூட்டப்... மேலும் பார்க்க

பேராவூரணி பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி மற்றும் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடிய 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.பேராவூரணி கடைவீதியில் கடந்த சில நாள்களாக கடைகள், வங்கிகள், திருமண மண்டபங்கள் ம... மேலும் பார்க்க