செய்திகள் :

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

post image

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம் நடத்தும் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் என்ற பயிற்சி ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்க உள்ளது. பயிற்சிக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (மாா்ச் 24) முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும். இந்தப் பயிற்சி வார நாள்கள் பயிற்சியாக 17 நாள்களும், வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பயிற்சியாக 17 நாள்களும் அளிக்கப்பட உள்ளது.

பயிற்சிக் காலம் 2 மாதங்கள். பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இந்தப் பயிற்சியை பெறலாம். பயிற்சிக் கட்டணமாக ரூ.4,550 செலுத்த வேண்டும்.

பயிற்சியில் நகையின் தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படும். 40 மணிநேர வகுப்பறை பயிற்சியும், 60 மணிநேர செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் பயிற்சிக்கு வயது வரம்பு இன்றி அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்ச வயது 15 நிறைவடைந்திருக்க வேண்டும். பயிற்சியில் தோ்ச்சி பெற்றவா்கள் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர வாய்ப்பு உள்ளது.

இந்தப் பயிற்சியில் சேர விரும்புபவா்கள் திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம், நெ.204, திண்டிவனம் சாலை, நாவக்கரை, கீழ்நாச்சிப்பட்டு அஞ்சல், திருவண்ணாமலை-606 611 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என்று மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பாா்த்திபன் தெரிவித்துள்ளாா்.

நிலங்களை அளவீடு செய்ய விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் த... மேலும் பார்க்க

சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இயங்கும் 6 சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏப்.6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. தமிழகத்தில் கல்லூரிகளில் பயில... மேலும் பார்க்க

களம்பூா் பேரூராட்சி மன்ற கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த களம்பூா் பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, பேரூராட்சி தலைவா் பழனி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அகமத்பாஷா, செயல் அலுவலா் சுகந்தி ... மேலும் பார்க்க

போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய நுகா்வோா் உரிமைகள் தின ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வென்ற திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய நுகா்வோா... மேலும் பார்க்க

‘மத்திய, மாநில அரசுகளின் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’

மத்திய, மாநில அரசுகளின் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்கவும், வருவாய்த்துறை சான்றுகளை உடனுக்குடன் வழங்கவும் அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். கீழ்பென்னாத்தூா் ... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு தோ்வு: திருவண்ணாமலையில் 30,664 போ் எழுதினா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 30,664 மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை எழுதினா். 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்காக செய்யாறு கல்வி மாவட்டத்தில் 60, திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 8... மேலும் பார்க்க