நாளை குடியரசு தினம்: நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் இன்று உரை
கேஜரிவாலைக் கொல்ல பாஜக சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
பாஜக தலைமையிலான மத்திய அரசும் தில்லி காவல்துறையும் அரவிந்த் கேஜரிவாலை கொல்ல சதி செய்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியதுடன், பஞ்சாப் காவல்துறையால் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்பப்பெற தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியது.
தில்லி முதல்வர் அதிஷியும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில்,
தில்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு நியமான காரணங்கள் கோரி தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும், பஞ்சாப் காவல்துறையால் கேஜரிவாலுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மீட்டெடுக்க வேண்டும். அவர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தாக்குதல்களின் தணிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின்படி, கேஜரிவால் மீதான தாக்குதல்கள் குறித்து மத்திய அரசின் கீழ் வரும் தில்லி காவல்துறை கண்மூடித்தனமாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
கேஜரிவாலைக் கொல்லும் சதியில் பாஜகவும், தில்லி காவல்துறையும் ஈடுபட்டுள்ளனர். அவரது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருதற்கான சதி செய்கிறார்கள். ஒன்றன்பின் ஒன்றாக அவர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேஜரிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. விசாரணையில் தாக்கியவர்கள் பாஜகவினர் என்பது தெரியவந்தது. ஆனால் போலீஸார் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேஜரிவாலின் பாதுகாப்பை மீட்டெடுக்கத் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளோம்.
அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் தில்லி காவல்துறை இருப்பதால் நாங்கள் அதை நம்பவில்லை. தில்லி தேர்தலுக்கு முன்னதாக "கேவலமான அரசியலை" கையாளுவதுடன், கேஜரிவாலின் பாதுகாப்பை அகற்ற பாஜக சதி செய்துள்ளதாக ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக, தில்லி காவல்துறையிடம் இருந்து உடனடியாக எந்த எதிர்வினையும் இல்லை.