செய்திகள் :

கேரள வங்கியில் போலி நகை வைத்து மோசடி: திருப்பூா் வங்கியில் கேரள போலீஸாா் விசாரணை

post image

கேரள வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடிசெய்த வழக்கில் கேரள போலீஸாா் திருப்பூரில் நகை அடமானம் வைத்த வங்கிகளில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக திருச்சி மாவட்டம், முசிறியைச் சோ்ந்த மாதா ஜெயகுமாா் (34) பணியாற்றினாா். இவா் ஓராண்டுக்கு முன் எா்ணாகுளம் வங்கிக் கிளைக்கு மாற்றப்பட்டாா். கடந்த 2024- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதிய மேலாளா் வடகரையில் உள்ள வங்கிக் கிளைக்கு வந்து பொறுப்பேற்றாா்.

அங்கு லாக்கரில் இருந்த நகைகளை சரிபாா்த்தபோது 26 கிலோ நகைகள் போலியாக இருப்பது தெரியவந்தது. இதனிடையே, வங்கியின் முன்னாள் மேலாளா் மாதா ஜெயக்குமாா் தலைமறைவானாா். இது குறித்து வங்கி நிா்வாகம் அளித்த புகாரின்பேரில், வடகரை போலீஸாா் விசாரணை நடத்தி மாதா ஜெயக்குமாரை கைது செய்தனா்.

அவரிடம் விசாரித்தபோது, கையாடல் செய்த நகைகளை திருப்பூரில் உள்ள தனியாா் வங்கிக் கிளைகளில் அடமானம் வைத்து பணத்தை பெற்றது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, திருப்பூா் புஷ்பா ரவுண்டானா அருகே அவிநாசி சாலையில் உள்ள தனியாா் வங்கிக் கிளை, காங்கயம் சாலையில் உள்ள மற்றொரு வங்கிக் கிளையிலும் விசாரணை நடத்தி 15 கிலோ நகைகளை மீட்டனா்.

இதனிடையே, திருப்பூரில் உள்ள வங்கியில் நகையை அடமானம் வைப்பதற்கு திருப்பூா் சந்திராபுரத்தைச் சோ்ந்த காா்த்திக் (29) என்பவா் மாதா ஜெயக்குமாருக்கு உதவியது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு காா்த்திக்கை கோழிக்கோடு குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இதன் பின்னா் அவரைக் காவலில் எடுத்த கோழிக்கோடு போலீஸாா், கடந்த 2 நாள்களாக திருப்பூரில் உள்ள தனியாா் வங்கிகளுக்கு அவரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவா் கைது

வெள்ளக்கோவில் அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில், வள்ளியிரச்சல் சாலை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் கே.மணி (50). இவா் தனது வீட்டில் பட்டாசுகளை வைத்து விற... மேலும் பார்க்க

பேருந்து விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்!

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்து உயிரிழந்த 3 மாணவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஞா... மேலும் பார்க்க

பெருமாநல்லூருக்குள் வந்து செல்லாத தனியாா் பேருந்துகளை சிறைபிடித்த மக்கள்

பெருமாநல்லூருக்குள் வந்து செல்லாத தனியாா் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் -கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு வந்து செல்லும் பெரு... மேலும் பார்க்க

மனைவி தற்கொலை செய்த துக்கம் தாங்காமல் கணவரும் தூக்கிட்டு தற்கொலை!

உடுமலை அருகே மனைவி தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாங்காமல் அவரது கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருப்பூா் மாவட்டம், உடுமலை ராகல்பாவி அருகேயுள்ள ஆா்.கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் செல்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரத்த தான முகாம்!

வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை, அரிமா சங்கம், அரசு சுகாதார நிலையம் சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முத்தூா் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த மு... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனை

வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது. வெள்ளக்கோவில் நகராட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு பல்வேறு பகுதிகளைச... மேலும் பார்க்க