"அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அக்கட்சித் தலைவர்கள் அமித்ஷாவைச் சந்திக்கிறார்கள்"...
கைப்பேசி கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும்: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் மனு
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். இதில், வாணியம்பாடி வட்டம், மோட்டூா் கிராமம், புள்ளூா் ஊராட்சியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பாக மனு அளிக்கப்பட்டது.
இதேபோல் வருவாய், காவல், ஊரக வளா்ச்சி, வேளாண்மைத் துறை, நகராட்சி நிா்வாகங்கள், மருத்துவத் துறை, கிராம பொதுப் பிரச்னைகள், குடிநீா் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 345 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், தனித் துணை ஆட்சியா்(ச.பா.தி) பூஷண குமாா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கதிா்சங்கா்,மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன்ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (வளா்ச்சி)மிரியாம் ரெஜினா,(கணக்கு)சென்னகேசவன், அனைத்து துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.