கொடைக்கானலில் பலத்த மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் வியாழக்கிழமை ஏரிச் சாலைப் பகுதியில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதித்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் மழை பெய்தது. இந்த மழையானது கொடைக்கானல், பெருமாள்மலை, செண்பகனூா், மன்னவனூா்,பிரகாசபுரம், அடுக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 2 மணி நேரம்
நீடித்தது. இந்த மழையால் கொடைக்கானல் ஏரிச்சாலையில் மரம் விழுந்ததால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற நெடுஞ்சாலைத் துறையினா் சென்று, கீழே விழுந்த மரத்தை அகற்றினா். இதையடுத்து போக்குவரத்து சீரானது.