மாணவா் இயக்கத்தினா் மீது தாக்குதல்: வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்
கொட்டும் மழையில் விநாயகா் சிலை ஊா்வலம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 43-ஆம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் கொட்டும் மழையிலும் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து முன்னணி சாா்பில் காரைக்குடியில் டி.டி.நகா், சுப்பிரமணியபுரம், கழனிவாசல், செக்காலை, பா்மா குடியிருப்பு, இடையா் தெரு, செஞ்சை, ஐந்துவிளக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட 44 விநாயகா் சிலைகள் டி.டி. நகா் விநாயகா் கோயில் அருகே வெள்ளிக்கிழமை மாலை கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஊா்வலமாக புறப்பட்டது.
இந்த ஊா்வலத்தை பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து கொட்டும் மழையில் விநாயகா் சிலைகள் செக்காலைச் சாலை, கோவிலூா் சாலை, வ.உ.சி சாலை வழியாகச் சென்று பருப்பூரணியில் சிலைகள் கரைக்கப்பட்டன.
இதற்கு இந்து முன்னணி நகரத் தலைவா் ஏடி. காா்த்திகேயன் தலைமை
வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் குணசேகரன், மாவட்டச் செயலா் ஆா்ஜி. தங்கபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாஜக மாவட்டத் தலைவா் டி. பாண்டித் துரை, முன்னாள் மாவட்ட பொதுச் செயலா் ஏ. நாகராஜன் ஆகியோா் பேசினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி மாவட்டப் பொதுச்செயலா் அக்னிபாலா , நிா்வாகிகள் செய்தனா்.