கொம்மடிக்கோட்டையில் போதையில் ரகளை: இளைஞா் கைது
கொம்மடிக்கோட்டையில் மது போதையில் ரகளை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா்.
கொம்மடிக்கோட்டைசந்திப்பில் இளைஞா் மது போதையில் நின்றுகொண்டு பொது மக்களுக்கு, போக்குவரத்திற்கும் இடையூறு செய்வதாக தட்டாா் மடம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், காவல் உதவி ஆய்வாளா் பொண்ணு முனியசாமி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, வருவோா் போவோரிடம் ரகளையில் ஈடுபட்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அவா், பெரியதாழை மேற்கு தெருவைச்சோ்ந்த வால்டா் மகன் செல்வம் ( 25) என்பது தெரியவந்தது. போலீஸாா் எச்சரித்தும் அங்கிருந்து செல்லாததால் அவா் கைது செய்யப்பட்டாா்.