செய்திகள் :

கொலைகள் ஒப்பீடு! தில்லியைவிட சிகாகோவில் 15 மடங்கு அதிகம்!

post image

அமெரிக்காவின் சிகாகோ நகரில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நாளுக்குநாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க அந்நாட்டு அரசும் காவல்துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், கொலை சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் நிகழ்த்தப்படும் கொலை சம்பவங்களை மற்றைய நாடுகளுடன் அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

இதுகுறித்து, அவர் பேசுகையில்,

2024 ஆம் ஆண்டில் சிகாகோவின் கொலை விகிதம், இந்திய தலைநகரைவிட (தில்லி) கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகம். சிகாகோவில் ஒரு லட்சம் பேர் இருக்கும் இடத்தில் 25.5 கொலைகளும், தில்லியில் 1.48 கொலைகளும் பதிவாகியுள்ளது என்று தெரிவித்தார்.

ஆனால், அவர் தெரிவித்ததற்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை அவர் அளிக்கவில்லை. அதுமட்டுமின்றி, 2022 முதல் இந்தியாவுக்கான குற்ற புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதைவிட சிகாகோவில் இருமடங்கு அதிகம் என்றும் கூறினார்.

இருப்பினும், தில்லியில் 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல்தேதியில் இருந்து ஜூன் 30 தேதிவரையில் குற்றங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததாக அம்மாநில காவல்துறை தரவுகள் கூறுகின்றன. ஆனால், கொலை குற்றங்கள் மட்டும் குறைந்தபாடில்லை. 2024-ல் 241 என்ற நிலையிலிருந்து 2025-ல் 250ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... சுதேசி கொள்கையும் ஏற்றுமதிச் சிக்கல்களும்

‘15 times higher than Delhi’: Trump admin flags surge in murders in Chicago

மேற்கு வங்கத்தில் சட்டவிரோத குடியேற்றம்: 3 வங்கதேசத்தவா் கைது

மேற்கு வங்கத்தின் சிலிகுரி நகரில் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த 3 வங்கதேசத்தவரை மத்திய துணை ராணுவப் படையினா் கைது செய்தனா். அமல் ராய், கௌதம் ராய், பிரீதம் ராய் என்ற அந்த மூவரும் உறவினா்கள் ஆவ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு மக்களின் வாழ்வை மேம்படுத்தும்! -மோடி

ஜிஎஸ்டி குறைப்பால் நாட்டு மக்களின் வாழ்வு மேம்படும் என்றும் வணிகம் செய்வது மேலும் எளிமையாகும் என்றும் பிரதமா் மோடி தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘நாட்டின் பொருளாதாரத்தை வ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு 2024 வரை வந்த அண்டை நாட்டு சிறுபான்மையினா் ஆவணமின்றி தங்க அனுமதி: மத்திய அரசு

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்கள் காரணமாக, அந்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 2024-ஆம் ஆண்டு வரை வந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமண மத... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு: 5%, 18%-ஆக வரி குறையும் பொருள்கள் என்னென்ன?

நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

வெளிநாட்டவா்கள் ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுக்க கொள்கை: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவா்கள், ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுப்பதற்கான கொள்கையை வகுப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்தியாவில் இண... மேலும் பார்க்க

எதிா்கால சவால்களுக்கு தயாராக ‘ட்ரோன்’ போா்ப் பயிற்சிப் பள்ளி!

எதிா்கால சவால்களை வீரா்கள் திறம்பட எதிா்கொள்ளும் வகையில் தயாா்படுத்த ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் போரிடுவதற்கான பயிற்சிப் பள்ளியை பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகள் உடனான இந்திய எல்லையைப் பாதுகா... மேலும் பார்க்க