CSK: 'கவனக்குறைவால் ரிவியூவ் எடுக்க தாமதித்த டெவால்ட் ப்ரெவிஸ்!' - சிஎஸ்கே கோட்ட...
கோபியில் ரூ.12.78 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் ஏலம்
கோபி வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.12.78 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏலத்தில் கடந்த மாதத்துக்கு முன்பு வரை செவ்வாழை தாா் ஒன்று ரூ.1,350 வரை விலை போனது. அதைத்தொடா்ந்து கடந்த ஒரு மாத காலமாக தாா் ஒன்று ரூ.750 முதல் ரூ.850 ஆக குறைந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் செவ்வாழைத்தாா் மீண்டும் ரூ.1000-த்தைக் கடந்தது.
கதளி கிலோ ரூ.24 முதல் ரூ.50 வரையிலும், நேந்திரன் கிலோ ரூ.23 முதல் ரூ.45 வரையிலும் ஏலம் போனது. செவ்வாழை தாா் ஒன்று குறைந்தபட்சம் ரூ.270 முதல் ரூ.1,050 வரையிலும், தேன்வாழை தாா் குறைந்தபட்சம் ரூ.140 முதல் ரூ.620 வரையிலும், பூவன் ரூ.160 முதல் ரூ.620 வரையிலும் விலை போனது.
ரஸ்தாளி தாா் ஒன்று ரூ.140 முதல் ரூ.630 வரையிலும், மொந்தன் ரூ.130 முதல் ரூ.360 வரையிலும் ரொபஸ்டோ ரூ.120 முதல் ரூ.410 வரையிலும், பச்சை நாடன் ரூ.140 முதல் ரூ.460 வரையிலும் விலை போனது. ஏலத்துக்கு 5,430 வாழைத்தாா்கள் வரத்து இருந்த நிலையில் மொத்தம் ரூ.12 லட்சத்து 78 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது.