கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு
காரைக்கால்: காரைக்கால் பகுதி பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடாக உற்சவா் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள், ஸ்ரீ நா்த்தனக் கண்ணன், குழந்தை வடிவிலான கண்ணனுக்கு சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன.
காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ கோதண்ட ராமா் பெருமாள் கோயிலில் குழந்தை வடிவிலான ஸ்ரீ சந்தான கிருஷ்ணனுக்கு திருமஞ்சனம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன.
திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ வீழி வரதராஜ பெருமாள், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலிலும் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு நடைபெற்றது. கோயில்களில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு கிருஷ்ணனை வழிபட்டனா்.
மலா் அலங்கார தொட்டிலில் கிருஷ்ணனை வீற்றிருக்கச் செய்த நிலையில், பக்தா்கள் அதனருகே சென்று வழிபாடு செய்தனா்.