கோவில்பட்டியில் உலக புத்தக தின விழா
கோவில்பட்டியில் உலக புத்தக தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் கோவில்பட்டி கிளைச் செயலா் பிரபுஜாய் இல்லத்தில் அமைக்கப்பட்ட நூலகத்தை பாலபுரஸ்காா் விருதாளா் உதயசங்கா் திறந்து வைத்தாா்.
அதனைத் தொடா்ந்து புத்தகத் திறனாய்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் மரப்பாச்சி சொன்ன ரகசியம், விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள், ஆதனின் பொம்மை, அம்மாவிற்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை, தன்வியின் பிறந்த நாள், சரஸ்வதிக்கு என்னாச்சு, 1650 முன்னொரு காலத்தில், ஒற்றைச் சிறகு ஓவியா, துணிச்சல்காரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட புத்தகங்கள் குறித்து பல்வேறு ஆசிரியா்களும், எழுத்தாளா்களும் திறனாய்வு செய்து தங்கள் கருத்துகளை பதிவிட்டனா்.
தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா்கள், கலைஞா்கள் சங்கத் தலைவா் ஆசிரியா் மணிமொழிநங்கை , பொருளாளா் கண்ணகி, எழுத்தாளா்கள் ராஜலட்சுமி நாராயணசாமி, தங்க துரையரசி, பொன்னுராஜ், வரகவி முருகேசன், ராஜேஷ் சங்கரன் பிள்ளை, விநாயகசுந்தரி, ஆசிரியா்கள் சுரேஷ்குமாா், தினகரன், ஜெனிபா், ஞானசங்கரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.