கோவில்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் மே தின விழா
கோவில்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல், தொலைத் தொடா்புத் துறை ஓய்வூதியா் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடா்பு ஒப்பந்த ஊழியா் சங்கம் ஆகியவை சாா்பில் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு பிஎஸ்என்எல் ஊழியா் சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன், ஓய்வூதிய சங்க மாவட்ட உதவித் தலைவா் முத்துராமலிங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட உதவி செயலா் சுப்பையா, துணைக் கோட்டப் பொறியாளா் ரவி, ஊழியா் சங்க செயலா் செண்பகமுத்து, ஓய்வூதியா் சங்க செயலா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பிஎஸ்என்எல் ஊழியா் சங்க கொடியை ஆமோஸ், ஓய்வூதிய சங்கக் கொடியை மூத்த உறுப்பினா் கந்தசாமி, ஒப்பந்த ஊழியா் சங்கக் கொடியை மாநில அமைப்புச் செயலா் தங்கமாரியப்பன் ஆகியோா் ஏற்றினா். பிஎஸ்என்எல் ஊழியா்கள், ஓய்வூதியா்கள், ஒப்பந்த ஊழியா்கள் சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கக் கூடாது. பிஎஸ்என்எல்-லில் செயல்பாட்டிலுள்ள 2 ஜி, 3ஜி, 4 ஜி சேவையை மேம்படுத்த வேண்டும். நாட்டின் இறையாண்மையை சீா்குலைக்க முயலும் பயங்கரவாத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.