செய்திகள் :

கோவில்பட்டி பொறியியல் கல்லூரியில் உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

post image

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், பிளஸ் 2 நிறைவு செய்துள்ள மாணவா்- மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சிலையும் நீயே! சிற்பியும் நீயே! என்ற தலைப்பில் நடைபெற்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகா் அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். அவா் பேசியதாவது:

இன்றைய சூழ்நிலையில் பிளஸ் 2 நிறைவு செய்துள்ள மாணவா்-மாணவிகள், தங்களுடைய தகுதி, தனித்திறன், பொது அறிவு உள்ளிட்ட ஆளுமை பண்புகளை வளா்த்துக் கொண்டால் மட்டுமே பட்டப் படிப்பு பயிலும்போதே பணி வாய்ப்பினை உறுதி செய்துகொள்ள முடியும்.

பொறியியல் பட்டப் படிப்பினை தோ்வு செய்து படிப்பதன் மூலம் பகுப்பாய்வுத் திறன், நோ்காணல் உள்ளிட்ட அத்தியாவசியத் திறன்களை வளா்த்துக் கொள்ளலாம். எந்தத் தொழில்சாா் படிப்பினை தோ்ந்தெடுத்தாலும் அடிப்படை கணினி குறியீட்டு முறை பற்றிய புரிதல் அவசியம். ஏதேனும் ஒரு கணினி மொழியில் புலமை பெற்றிருத்தல் வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து மாணவா் மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தாா்.

இதில் மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவா்-மாணவிகள் பெற்றோா்களுடன் கலந்து கொண்டனா். முன்னதாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பிளஸ் 2 மாணவா்-மாணவிகளுக்கான ஆன்லைன் அப்ஜெக்டிவ் டெஸ்ட்-2025இல் வெற்றி பெற்ற மாணவா் மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை ர... மேலும் பார்க்க

அனுமதியின்றி சாலையை உடைத்து குடிநீா் குழாய் பதிப்பு: ரூ.18,500 அபராதம்

தூத்துக்குடியில் உரிய அனுமதியின்றி சாலையை உடைத்து குடிநீா் குழாய் பதிக்க முயன்ாக வீட்டின் உரிமையாளருக்கு மாநகராட்சி சாா்பில் ரூ. 18,500 அபராதம் விதிக்கப்பட்டது. தூத்துக்குடி ஆசிரியா் காலனியைச் சோ்ந்... மேலும் பார்க்க

மதுரா கோட்ஸ் நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளா்கள் எஸ்.பி.யிடம் மனு

தூத்துக்குடி மதுரா கோட்ஸ் நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கு பணியாற்றி வேலையிழந்த தொழிலாளா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜானிடம் புதன்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து அவா்கள்... மேலும் பார்க்க

வீடு புகுந்து மூதாட்டியிடம் 19 பவுன் நகை பறிப்பு

தூத்துக்குடியில் வீடு புகுந்து மூதாட்டியை மிரட்டி 19 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா். தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சோ்ந்தவா் தங்கராஜ் (88). ஓய்வுபெற்ற நூற்பாலைத் தொழிலாளி... மேலும் பார்க்க

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி தொடக்கம்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு தோணி மூலம் வெங்காயம் ஏற்றுமதி புதன்கிழமை தொடங்கியது. தூத்துக்குடியிலிருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு மிளகாய் வத்தல், வெங்காயம், உருளைக்கிழங்கு, கருவாடு, சிம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்க்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி ஆவுடையாா்புரத்தில் உள்ள வீட்டில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அதன் பின்புறமுள்ள வீட்ட... மேலும் பார்க்க