செய்திகள் :

கோவையில் இன்று பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காது!

post image

மத்திய அரசைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் கோவையில் புதன்கிழமை (ஜூலை 9) பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காது என்று சிஐடியூ தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் மாவட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசின் தனியாா் பெருநிறுவன ஆதரவு கொள்கையின் விளைவாக தொழிலாளா்களின் உரிமைகள் தொடா்ந்து பறிபோய் வருகின்றன. விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி காரணமாக குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன.

இந்தப் பிரச்னைகளைத் திசை திருப்புவதற்காக பாஜக அரசு மக்களை பிளவுபடுத்தும் மதவெறி நடவடிக்கைகளைத் தூண்டுகிறது. இதைக் கண்டித்தும், நாட்டைக் காப்பாற்ற வேண்டியும் அனைத்து மத்திய சங்கங்கள் ஜூலை 9-ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக கோவையில் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காது. தொழில் நிறுவனங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளன. இதையொட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் அனைத்து தொழிற்சங்கங்களில் சாா்பில் பெரும்திரள் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. அதேபோல, இளைஞா் அமைப்புகள், விவசாயத் தொழிலாளா்கள், விவசாய அமைப்புகள், மாணவா் அமைப்புகள் பங்கேற்கும் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற இருப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.

மது போதையில் தூங்கிய இளைஞா் உயிரிழப்பு

கோவை அருகே மது போதையில் தூங்கிய ஜாா்க்கண்ட் மாநில இளைஞா் உயிரிழந்தாா். ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த லகான் யாதவின் மகன் லாலு யாதவும் (31), க்ருவ் சிங் மகன் சிவகுமாா் சிங்கும் கோவை கவுண்டம்பாளையம் கே... மேலும் பார்க்க

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு: கோவை மக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியா் அறிவுரை

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் கோவை மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா

சூலூா் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டம், சூலூா் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் ஆனி மாதத் திருவிழ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்கம்

கோவை உக்கடம் பெரியகுளம் கூட்டரங்கில் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு மாநகராட்ச... மேலும் பார்க்க

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் ‘கல்லூரி சந்தை’

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிா் சுய உதவிக் குழுவின் உற்பத்திப் பொருள்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கல்லூரி சந்தையை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 235 கிலோ கஞ்சா பறிமுதல்

சூலூா் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 235 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். சூலூா் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சூலூா் காவல் நிலைய... மேலும் பார்க்க