`காது, கழுத்தில் நகையுடன் வந்தால் எப்படி தருவாங்க!'- கேட்ட அமைச்சர்... எழுந்த சி...
கோவையில் செப்டம்பா் 13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்டம்பா் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடா்பாக கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூா், மதுக்கரை மற்றும் அன்னூா் நீதிமன்ற வளாகங்களிலும் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (செப்டம்பா் 13) நடைபெற உள்ளது.
இதில், ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடா்பான வழக்குகள், வங்கிக் கடன், கல்விக் கடன் தொடா்பான வழக்குகளுக்கு சமரச தீா்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.