செய்திகள் :

கோவை: கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு!

post image

கேரள மாநிலம், பட்டனம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப் ஆபிரகாம். இவர் தன் மனைவி ஷீபா, மருமகள் அலினா தாமஸ் மற்றும் 2 மாதமே ஆன பேரன் ஆருண் ஆகியோருடன் இன்று காலை பெங்களூருக்கு காரில் புறப்பட்டனர்.

கோவை

கார் கேரளாவைக் கடந்து கோவை அருகே சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில்  வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த ஈச்சர் லாரியும், இவர்கள் சென்ற காரும் நேருக்கு நேர் மோதியது.

இதில் ஜேக்கப் ஆபிரகாம், ஷீபா மற்றும் ஆருண் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அலினா தாமஸ் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை விபத்து

மதுக்கரை காவல்துறையினர் இந்த விபத்து குறித்து சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தான் லாரியை ஓட்டி வந்துள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், “நீலாம்பூர் - மதுக்கரை நான்கு வழிச்சாலை குறுகியிருப்பதால் இந்தப் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன.

கோவை விபத்து

சாலையை விரிவுபடுத்துவதற்கான பணிகளும் தொடங்கவில்லை. அரசு உடனடியாக அந்த சாலையை விரிவுபடுத்துவதற்கான பணிகளை தொடங்கி விபத்து அபாயத்தை குறைக்க வேண்டும்.” என்றனர்.

இலங்கை: கிலோ கணக்கில் தொடர்ந்து சிக்கும் தங்கம்; `பாக் நீரிணை’ பகுதியும் தங்கம் கடத்தலும்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கடல் வழியாக போதை பொருட்களான கஞ்சா, போதை மாத்திரைகள், வலிநிவாரணி மாத்திரைகள், பீடி பண்டல்கள், தங்க கட்டிகள் ஆகியன கள்ளத்தனமாக கடத்தி செல்வது வாடிக்கையாகி வருகிறது. இந... மேலும் பார்க்க

கோவை: கரூர் கம்பெனி Vs டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் - வெடிக்கும் பஞ்சாயத்து

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023ம் ஆண்டு சிறைக்கு செல்வதற்கு முன்பு டாஸ்மாக் துறையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பார் உரிமையாளர்களிடம் கறார் வசூல், டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங... மேலும் பார்க்க

ISKCON: ஆரம்பத்தில் சின்ன சின்னதாய்; இப்போது லட்சக்கணக்கில் - கோயில் பணத்துடன் ஓட்டம் பிடித்த ஊழியர்

ஆக்ராவில் லட்சக்கணக்கில் கோயில் பணத்தை ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி உள்ளார் இஸ்கான் ஊழியர் ஒருவர். ஆக்ரா பிருந்தாவனத்தில் உள்ள இஸ்கான் அமைப்பில் 2019-ம் ஆண்டு சேர்ந்துள்ளார் முரளிதர் தாஸ் என்பவர். இந்த சம... மேலும் பார்க்க

`மனைவிக்கு பாடம் கற்பிக்கிறேன்' - பெற்றோர் வீட்டுக்குச் சென்று திரும்பி வராததால் கணவர் விபரீத முடிவு

குஜராத்தில், மனைவிக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று கணவன் தூக்குபோட்டுத் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் அவர் செல்போன் வீடியோ மூலம் தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது. போலீஸாரின் கூற்றுப்படி, பொடாட் ... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள்; பனியன் நிறுவனத்தில் பணி... திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தவர்கள் 6 பேர் கைது!

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர். அதிலும், குறிப்பாக மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ம... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் பழக்கம்; 500 பெண்களிடம் பணம் பறித்த 23 வயது இளைஞர்... பகீர் பின்னணி!

Delhi: டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் துஷார் பிஷ்ட், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துஷார் பிஷ்ட், பிரேசில... மேலும் பார்க்க