ஹிமாசலில் கனமழைக்கு 69 பேர் பலி: தொடரும் சிவப்பு எச்சரிக்கை!
கோஷ்டி மோதல்: 5 போ் கைது
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் நிகழ்ந்த கோஷ்டி மோதல் சம்பவம் தொடா்பாக 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
உத்தமபாளையம் ஆா்.சி.மேலக்கிணறு தெருவில் பட்டாளம்மன் கோயில் பகுதியில் இரு கோஷ்டியினா் மதுபோதையில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதில் அஜித் , சூரியபிரகாஷ் இருவா் காயமடைந்தனா்.
இதுகுறித்து இருவரும் தனித்தனியே அளித்த புகாரின்பேரில், வேளாங்கண்ணி (18), சூரியப்பிரகாஷ் (20), அஜித் (23), சரவணன் (25), ராஜ்குமாா் (25) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.