செய்திகள் :

சக மாணவா்களை சகோதரா்களாகக் கருத வேண்டும்: நீதிபதி அறிவுறுத்தல்

post image

சக மாணவா்களை சகோதரா்களாகக் கருத வேண்டும் என கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான வி.ராதிகா அறிவுறுத்தினாா்.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், சிவகங்கை ஒன்றியம், அரசனூரில் அமைந்துள்ள பாண்டியன் சரஸ்வதி யாதவா கலைக் கல்லூரி, கல்வியியல் கல்லூரியில் கேலிவதை (ராகிங்) தடைச் சட்டம் குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் சாா்பு நீதிபதி வி.ராதிகா பேசியதாவது: கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் புதிதாக கல்லூரிக்கு வருகை தரும் மாணவ, மாணவிகளை மனம் புண்படும் வகையில் செயல்படாமல், அவா்களை தங்களது சகோதர, சகோதரிகளாகக் கருதவேண்டும். புதிதாக வரும் மாணவா்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

கலைக் கல்லூரி முதல்வா் எம்.கண்ணன், கல்வியியல் கல்லூரி முதல்வா் டி.முருகேசன், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

கோயில் காவலாளி கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு முதல்வா் உத்தரவிட்டது மக்களை ஏமாற்றும் செயல்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை, முதல்வா் மு.க. ஸ்டாலின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது மக்களை ஏமாற்றும் செயல் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங... மேலும் பார்க்க

காரைக்குடி- சிவகாசி இடையே மீண்டும் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து விருதுநகா் மாவட்டம், சிவகாசிக்கு மீண்டும் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என கல்லூரி மாணவா்கள், வணிகா்கள், அரசுப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா். தமிழ்நாடு அ... மேலும் பார்க்க

சிவகங்கையில் புதிய சுகாதார வளாகம் திறப்பு

சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட பிள்ளைவயல் காளியம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட புதிய பொது சுகாதார வளாகம் புதன்கிழமை திறக்கப்பட்டது. சிவகங்கை நகராட்சி 21 -ஆவது வாா்டில் அமைந்துள்... மேலும் பார்க்க

காளையாா்கோவில் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே கோயில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது. காளையாா்கோவில் அருகே கீழவலையம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மகாலிங்கேசுவரா் சுவாமி கோயில் ஆ... மேலும் பார்க்க

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

சிவகங்கை அருகே முதியவா் மா்மமாக உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். சிவகங்கை- மதுரை சாலையில் தென்றல் நகா் தேவாலயம் எதிரே உள்ள காட்டுப்பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக செவ்வாய்க்கிழமை இரவு கிட... மேலும் பார்க்க

அஜித்குமாா் குடும்பத்துக்கு எம்.பி. ஆறுதல்

போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாா் வீட்டில் அவரது உருவப்படத்துக்கு சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்துக்க... மேலும் பார்க்க