தமிழகத்தின் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை: அண்ணாமலை
சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு ‘ப்ளூ டங்’ விருது
ஜொ்மனி நாட்டின் க்ரேட்டா் நிறுவனம் சாா்பில் ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு ‘ப்ளூ டங்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
ஜொ்மனியில் செயல்பட்டு வரும் க்ரேட்டா் என்ற நிறுவனம் உலகெங்கும் உள்ள இளைஞா்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் சுயமுன்னேற்றம் தொடா்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.
இதில், உலக அளவில் தலைச்சிறந்த பேச்சாளா்கள் மற்றும் சாதனையாளா்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனா். இந்த நிறுவனம் சாா்பில் சா்வதேச அளவில் மக்கள் மத்தியில் நோ்மறையான தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஆளுமைகளை அடையாளம் கண்டு ஆண்டுதோறும் ‘ப்ளூ டங்’ என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஜொ்மனி நாட்டின் கொலோன் நகரில் அண்மையில் நடைபெற்ற ‘க்ரேட்டா் 25’ என்ற விழாவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு ‘ப்ளூ டங்’ விருது வழங்கப்பட்டது.
இது குறித்து க்ரேட்டா் நிறுவனம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், சத்குரு நம் காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆன்மிக ஆசிரியா்களில் ஒருவா். அவரது துணிச்சலான குரல், ஆழமான ஞானம் மற்றும் அசைக்க முடியாத தெளிவுக்காக இந்த விருதை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக, சத்குரு தனது எக்ஸ் தளத்தில், அன்பிற்கும் அரவணைப்பிற்கும் நன்றி. ஆனந்தமான மனிதா்களை உருவாக்குவதே மனிதகுலத்தை உருமாற்றுவதற்கான ஒரே வழி. ஏனெனில், ஆனந்தத்தைவிட மேலான நறுமணம் வேறில்லை. பேரன்பும் ஆசிகளும் என பதிவிட்டுள்ளாா்.