சூறைக்காற்றுடன் மழை: குழித்துறையில் மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதம்
சனி பிரதோஷம்: தஞ்சை பெரிய கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
சனி பிரதோஷத்தை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் பெரு நந்திக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.
அதன்படி வைகாசி மாதத்தின் முதல் பிரதோஷமான இன்று சனி பிரதோஷம் என்பதால், பெருவுடையாருக்கு ஏற்ற பெரு நந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி எலுமிச்சை சாறு, இளநீர் உள்ளிட்ட பன்னிரண்டு வகையான திரவியங்களால் சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம்பெருமானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.