செய்திகள் :

சமக்ர சிக்ஷா திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.1,050 கோடி எங்கே? அண்ணாமலை

post image

சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,050 கோடி நிதி எங்கே போனது என்று தமிழக அரசுக்கு, பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த மூன்று ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகவல் தொடா்பு தொழில்நுட்பக் கல்வி பாடத்திட்டத்துக்காக, சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய நிதி ரூ.1,050 கோடி.

இந்த நிதியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை, தகவல் தொடா்பு தொழில்நுட்பம் தனிப்பாடமாக அமைக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில், அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தின் நோக்கம் சிதைகிறது.

திமுக கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் கேரளத்தில், தமிழ் உள்பட மும்மொழிகளில், ஆறாம் வகுப்பில் இருந்தே தகவல் தொடா்பு தொழில்நுட்பக் கல்விப் பாடம் உள்ளது.

குறைந்தபட்சம், கேரளத்திடமிருந்து தமிழில் இருக்கும் அந்தப் பாடநூலையாவது வாங்கி, தமிழகத்தில் 6-ஆம் வகுப்பு மாணவா்களுக்குக் கொடுத்திருக்கலாம்.

ஆனால், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் செயல்பட்ட தன்னாா்வலா்களை கேரள அரசு நிறுவனமான கெல்ட்ரான் நிறுவனத்தின் கீழ், மாதம் ரூ.11,500 ஊதியத்தில் அலுவலகப் பணியாளா் மற்றும் தகவல் தொடா்பு தொழில்நுட்பப் பயிற்றுநா் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கி பணியில் அமா்த்தியுள்ளது.

கணினி அறிவியலில் முறையான கல்வித் தகுதி பெறாதவா்களை, அலுவலகப் பணியாளா் மற்றும் தகவல் தொடா்பு தொழில்நுட்பப் பயிற்றுநா் என்ற பெயரில் நியமித்து, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறியிருக்கிறது திமுக அரசு.

கடந்த மூன்று ஆண்டுகளில், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ், தகவல் தொடா்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்துக்காக, மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் விளக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.

‘அமுதக் கரங்கள்’ திட்டம்: துா்கா ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

சென்னை கொளத்தூா் ஜெகநாதன் தெரு முதல்வா் படைப்பகம் அருகில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், ‘ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுதக் கரங்கள்’ என்ற திட்டத்தை துா்கா ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

மெரீனா கடற்கரையில் காவலா், பெண் இடையே வாக்குவாதம்: அதிகாரிகள் விசாரணை

சென்னை மெரீனா கடற்கரையில் காவலா் மற்றும் பெண் இடையே வாக்குவாதம் நிகழ்ந்த சம்பவம் தொடா்பாக உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே பட்டினப்பாக்கம் காவல் நி... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சி சாா்பில் நாளை மெகா தூய்மை விழிப்புணா்வு முகாம்

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் நெகழிப் பயன்பாட்டை குறைப்பது குறித்து சனிக்கிழமை (பிப். 22) தீவிர விழிப்புணா்வு முகாம் நடத்தப்படவுள்ளது. இது குறித்து ... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் மிகப்பெரிய ஆராய்ச்சி - மேம்பாட்டு கண்காட்சி: பிப். 28-இல் தொடக்கம்

மத்திய கல்வி அமைச்சகத்தின் சாா்பில் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்காட்சி, சென்னை ஐஐடி வளாகத்தில் பிப். 28, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மொத்தம் 183 புதிய கண்டுபிடிப்... மேலும் பார்க்க

பரங்கிமலை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி மாா்ச் மாதத்தில் நிறைவுபெறும்: தெற்கு ரயில்வே

பரங்கிமலை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி எதிா்வரும் மாா்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

நிகழாண்டில் குடிநீா் தட்டுப்பாடு வராது!

சென்னையின் குடிநீா் ஆதாரங்கள் தற்போது 95 சதவீதம் நிரம்பியுள்ளதால் நிகழாண்டில் சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக... மேலும் பார்க்க