சமத்துவபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
புதுக்கோட்டை மாநகா் நரிமேடு சமத்துவபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாநகராட்சி 1 மற்றும் 2-ஆவது வாா்டு மக்களுக்காக நடத்தப்பட்ட இந்த முகாமை, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.
ஏராளமான பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான ஆவணங்கள், சேவைகளுக்காக இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்தனா்.
பதிவு செய்த பலருக்கும் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள், மின் இணைப்புக்கான ஆணைகள், மின்னணு குடும்ப அட்டைகளும் வழங்கப்பட்டன.
முகாமில், மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் (காவிரி- குண்டாறு இணைப்பு) ஆா். ரம்யாதேவி, மாமன்ற உறுப்பினா்கள் பழனிவேல், மதியழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.