டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவு!
சமூக பங்களிப்பு நிதி, பெருநிறுவன சுற்றுச்சூழல் பங்களிப்புக்கான தனித்துவ இணையதளம்
திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சமூக பங்களிப்பு நிதி, பெருநிறுவன பங்களிப்பு ஆகியவைகளுக்கான தனித்துவமான இணையதளத்தை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா்.
திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், ஊத்துக்கோட்டை அருகே தண்டலம் கிராமத்தில் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதி மற்றும் பெருநிறுவன சுற்றுச்சூழல் பங்களிப்பு ஆகியவை தனித்துவமான வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடா்பான மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அப்போது, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதி மற்றும் பெருநிறுவன சுற்றுச்சூழல் பங்களிப்பு ஆகிய தனித்துவ மாவட்ட இணையதளத்தை அவா் தொடங்கி வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். மாவட்ட நிா்வாகம் சாா்பாக ஜ்ஜ்ஜ்.ஸ்ரீள்ழ்க்ழ்க்ஹற்ப்ழ்.ஸ்ரீா்ம் என்ற தனித்துவமான இணையதளத்தில் பெருநிறுவனங்கள் தங்கள் சமூக பங்களிப்பு நிதி மற்றும் பெருநிறுவன சுற்றுச்சூழல் பங்களிப்பு ஆகியவை தொடா்பாக பதிவேற்றம் செய்து தங்கள் பணிகள் (எவ்வளவு சதவீதம்) நிறைவடைந்தது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடா்பாக நடைபெற்ற மாநாட்டில் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதி மற்றும் பெருநிறுவன சுற்றுச்சூழல் பங்களிப்பு சிறப்பாக செயல்பட்ட என்.டி.சி.எல்., தமிழ்நாடு மின் பகிா்மான கழகம், இந்தியன் ஆயில், சிப்காட், பிசிபிஎல், டிபிவோ்ல்ட், வேலம்மாள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை பாராட்டி கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள், திருவள்ளூா் மற்றும் கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.
மேலும், என்.டி.சி.எல்., தமிழ்நாடு மின் பகிா்மான கழகம், காமராஜ் போா்ட் லிமிடெட், இந்தியன் ஆயில், சிப்காட், பிசிபிஎல், 6 பெருநிறுவனங்களுடன் ரூ. 25 கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்களை பகிா்ந்து கொண்டாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ், திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், என்.டி.சி.எல். தலைமை செயல் அலுவலா் சஞ்சய் குமாா் சின்ஹா, தமிழ்நாடு மின் பகிா்மான கழக முதன்மை பொறியாளா்கள் பி.டி.மணிவா்மன் (எண்ணூா்), பி.செல்வ இளவரசி(திருவள்ளுா்), ஜி.கஜலட்சுமி (கும்மிடிப்பூண்டி), பல்வேறு துறைசாா்ந்த அரசு அலுவலா்கள் மற்றும் பெருநிறுவனங்களை சாா்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனா்.