செய்திகள் :

சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆள்மாறாட்டம் மூலம் 5.3 மில்லியன் டாலர் வருவாய்!

post image

தற்போதைய உலகில் தொழில், கல்வி, பொழுதுபோக்கு என அனைத்திலும் செயல் நுண்ணறிவின் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், காணொலி மூலம் நடத்தப்படும் தேர்வுகள், நேர்காணல்கள், விற்பனை அழைப்புகளில் செயல் நுண்ணறிவு மூலம் பதிலளிக்க சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உதவியளித்து வருகின்றன. தேர்வுகள், வேலைக்கான நேர்காணல்களிலோ விற்பனை அழைப்புகளிலோ (Sales Calls) எதிர்ப்புறம் இருப்பவர்களின் கேள்விகளுக்கு அல்லது உரையாடல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது முதல் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது வரையில் இந்த நிறுவனங்கள் கற்றுத் தருகின்றன.

அவற்றில் சில நிறுவனங்கள், ஆள்மாறாட்டத்துக்கும் உதவுகின்றன. தங்களின் வேலைக்காகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு வேறொருவரை பதிலளிக்கச் செய்வதும் ஒருவகையில் குற்றமே.

அந்த வகையில், ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் இவ்வாறு உதவியளிப்பதன் மூலம் 5.3 மில்லியன் டாலர் சம்பாதிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஆள்மாறாட்டம் போன்ற செயல் சரியல்ல என்று விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்தாலும், வருவாய் வந்துகொண்டுதான் இருக்கிறது என்று அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி கூறுகிறார்.

ஒருபுறம் செயல் நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்தாலும், மறுபுறம் மனிதர்களின் அறிவுத்திறனையும் மழுங்கச் செய்வது என்பதோ மறுக்கப்படாத உண்மைதான்.

இதையும் படிக்க:பெஹல்காம் தாக்குதல்: உச்ச நீதிமன்றம் மௌன அஞ்சலி

ரஷியா - உக்ரைன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை; ரத்து செய்த அமெரிக்கா?

ரஷியா - உக்ரைன் இடையிலான போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறவிருந்த நிலையில், கடைசி தருணத்தில் ரத்து செய்யப்பட்டது. ரஷியா - உக்ரைன் இடையிலான போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை, மாஸ்கோவ... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதியை எதிர்த்துப் போராடிய குதிரை ஓட்டி மரணம்!

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பயங்கரவாதியை எதிர்த்துப் போராடிய குதிரை சவாரி செய்பவர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா நகரமான பெஹ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!

ஜம்மு-காஷ்ரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதல் உயிரிழந்தோருக்கு அந்த மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா நிவாரணம் அறிவித்துள்ளார். பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத... மேலும் பார்க்க

காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பு இல்லை: பாகிஸ்தான்

காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.மேலும், பாகிஸ்தான் எந்த சூழலிலும் பயங்கரவாதத்தை ஆதரிக்காது என்று அவர் விளக்க... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸுக்கு ஏப். 26-ல் இறுதிச் சடங்கு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளது. 266-ஆவது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் பொதுத் தோ்தல்

ஆஸ்திரோலியாவில் பொதுத் தோ்தலுக்கான முன்கூட்டிய வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. போப் பிரான்சிஸ் மறைவைத் தொடா்ந்து பல்வேறு தோ்தல் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் வழக்கமான பரபரப்பு இல்லாமல்... மேலும் பார்க்க