தூத்துக்குடி மாவட்டத்தில் மினி பேருந்து சேவைக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
சாதிய வன்கொடுமைகள்: முதல்வருக்கு இயக்குநர் பா. ரஞ்சித் கேள்வி!
தமிழகத்தில் இன்றளவிலும் சாதிய வன்கொடுமைகள் நீடிப்பதாக இயக்குநர் பா. ரஞ்சித் பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் `உங்களில் ஒருவன்’ என்ற நேர்காணல் விடியோ வெளியிட்ட நிலையில், விடியோவைப் பகிர்ந்த இயக்குநர் பா. ரஞ்சித், முதல்வரிடம் சாதிய வன்கொடுமைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இயக்குநர் பா. ரஞ்சித், தனது எக்ஸ் பக்கத்தில் ``தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்குதடையின்றி நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த சில நாள்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் பட்டியலின மக்களின் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதைத் தடுக்க அல்லது குறைந்தபட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புக்கொள்கிறீர்களா?
தங்கள் அமைச்சரவையின்கீழ் இயங்கும் ஆதி திராவிட துறை அமைச்சர், அதிகாரிகளுக்கும், எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கும் இதைவிட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் பட்டியலினத்தவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் `உங்களில் ஒருவன்’ என்ற நேர்காணலில் கேள்விக்கு பதிலளிப்பது போன்ற விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விடியோவில் மத்திய பட்ஜெட், கல்வி, கூட்டணி கட்சிகள், இந்தியா கூட்டணி குறித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்து, பாலியல் குற்றங்கள், மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினார்.
இதையும் படிக்க:திமுக ஆட்சி இருண்ட காலத்தைவிட மோசம்: அண்ணாமலை