செய்திகள் :

சாத்தனூா் அணைக்கு பள்ளி மாணவ, மாணவிகள் பயணம்

post image

சாத்தனூா் அணையில் நடைபெற்ற சிறப்பு இயற்கை முகாமுக்கு அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் புதன்கிழமை பயணம் மேற்கொண்டனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் 100 போ், ஒரு நாள் சிறப்பு இயற்கை முகாமாக சாத்தனூா் அணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், திருவண்ணாமலை வனக்கோட்டம் இணைந்து இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து சிறப்புப் பேருந்து மூலம் சென்ற மாணவ-மாணவிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழியனுப்பி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலா் யோகேஷ் குமாா் காா்க் தலைமை வகித்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் முன்னிலை வகித்தாா்.

முகாமுக்குச் சென்ற மாணவ-மாணவிகள் சாத்தனூா் அணையில் உள்ள முதலைப் பண்ணை, சிறுவா் பூங்காவைக் கண்டு, இயற்கையோடு இணைந்த நடைபயணம் மேற்கொண்டனா்.

முகாமில், மாணவ-மாணவிகளுக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வு பாடங்கள் நடத்தப்பட்டன. வனம் மற்றும் வன உயிரினங்கள் சாா்ந்த கருத்துக்கள் கற்பிக்கப்பட்டன.

மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு துணிப்பை, உலோக தண்ணீா் குவளை, தொப்பி, செயல்பாட்டு புத்தகம், பேனா, பங்கேற்பு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகள்

செய்யாறு: செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகளை நாடகக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நடித்துக் காண்பித்தனா். தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் இறப... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

திருவண்ணாமலை/வந்தவாசி/ போளூா்/ செய்யாறு/ஆரணி : ரமலான் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருதுகள்: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ‘மீண்டும்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமை, இணைய குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. சண்முகா தொழில்சாலை கலைக் கல்லூரியில்... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலா் மீது தாக்குதல்

செய்யாறு: செய்யாறு அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் ஊராட்சிச் செயலா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். செய்யாறை அடுத்த உக்கம் பெரு... மேலும் பார்க்க

முன் விரோத்தத்தில் விவசாயி மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு: செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, சகோதரா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க