சிறு நிறுவனங்களுக்கான டிஜிட்டல் வா்த்தகம் குறித்த கருத்தரங்கம்
சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி.-தெ.ஆ. போட்டி ரத்து!
சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸி. தெ.ஆ. போட்டி மழையினால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறவிருந்த 7ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவிருந்தன.
ராவல்பிண்டியில் மழை பெய்து வருவதால் போட்டிக்கான டாஸ் சுண்டப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், மழை நிற்காத காரணத்தினால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3 (+2.140) புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் தெ.ஆ. முதலிடத்திலும் ஆஸி. 3 (+0.475) புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் இருக்கின்றன.
ஆட்டம் கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடைசி டெஸ்ட்டில் இரு அணிகளும் வென்றால் அரையிறுதிக்கு இரு அணிகளும் தகுதிபெறும். இல்லையென்றால் ரன் ரேட் விகிதத்தில் யாரவது ஒருவர் முன்னேற வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆஸி.க்கு அடுத்த போட்டி ஆப்கானிஸ்தானுடன் பிப்.28ஆம் தேதியும் தெ.ஆ. அணிக்கு அடுத்த போட்டி ஆப்கனுடனும் மார்ச்.1ஆம் தேதியும் நடைபெறவிருக்கின்றன.