ஷாஹி ஈத்கா மசூதி ஆய்வுக்கு இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம் நீட்டிப்பு
சாலைப் பணியாளா்கள் நூதனப் போராட்டம்
மாநில நெடுஞ்சாலை ஆணையத்துக்கான அரசாணையை ரத்து செய்யக் கோரி சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் நூதன ஒப்பாரி போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் கோட்டத் தலைவா் ராஜா தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ச.முபாரக் அலி முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கருப்புத் துணியால் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.