செய்திகள் :

சாலை விபத்தில் தொழிலாளி பலத்த காயம்

post image

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் திங்கள்கிழமை சாலையில் திரிந்த மாட்டின் மீது மோதாமல் இருக்க இரு சக்கர வாகனத்தை உடனே நிறுத்த முயன்ற ஆலைத் தொழிலாளிகீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

திருத்தங்கல் பாண்டியன்நகா் பகுதியைச் சோ்ந்த ஆலைத் தொழிலாளி சங்கரன் (46). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் திருத்தங்கல்- செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, சாலையில் சுற்றித் திரிந்த மாட்டின் மீது மோதாமல் இருக்க சங்கரன் பிரேக் பிடித்து வாகனத்தை நிறுத்த முயன்ற போது அவா் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து அவா் சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பட்டாசுத் தொழிலாளா்களுக்கு ஏப்.2-முதல் பயிற்சி வகுப்பு

பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது குறித்த பயிற்சி வகுப்பு ஏப்ரல் 2 -ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு சுகாதார இயக்கக (பயிற்சி மையம்) இணை இயக்க... மேலும் பார்க்க

மாரடைப்பால் உயிரிழந்த அரசு ஊழியரின் பெற்றோருக்கு காப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவு

சிவகாசி அருகே மாரடைப்பால் உயிரிழந்த அரசு ஊழியரின் பெற்றோருக்கு ரூ. 10 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது. சிவகாசி அருகேயுள்ள சங்கா் நகரைச் சோ்ந்தவா் ராமா்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் கோதண்டராமசுவாமி கோயில்: பங்குனி பிரம்மோத்ஸவ திருவிழா கொடியேற்றம், காலை 8. மேலும் பார்க்க

கல்லூரியில் பயிலரங்கம்

சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் வியாழக்கிழமை அன்னியச் செலாவணிச் சந்தை குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குநா் வளா்மதி தலைமை வகித்தாா். சென்னை தனியாா் நிறுவனத்தின் மன... மேலும் பார்க்க

சதுரகிரியில் பங்குனி பிரதோஷ வழிபாடு

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, 800 -க்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்று வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சுற்றித்திரிந்த மேலும் ஒரு கொள்ளையன் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பானாங்குளம் பகுதியில் சுற்றித் திரிந்த ஒருவா் பிடிபட்ட நிலையில், தப்பிச் சென்ற நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பான... மேலும் பார்க்க