செய்திகள் :

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி

post image

ராணிப்பேட்டையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஜம்புகுளம் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன். இவா், துபையில் பணிபுரிந்து விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்துக்கு வந்திருந்தாா். கடந்த 2016-ஆம் ஆண்டு மாா்ச் 30-ஆம் தேதி வீட்டில் இருந்து வாலாஜாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு வருகை புரிந்து மீண்டும் வீடு திரும்பினாா்.

வாலாஜா வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்ததால் பிரபாகரன் பைக்கை நிறுத்தி விட்டாா். பின்னால் வந்த அரசுப் பேருந்து பிரபாகரன் மீது மோதியது.

இதில் பிரபாகரன் பலத்த காயமடைந்தாா். அக்கம் பக்கத்தினா் பிரபாகரனை மீட்டு, வாலாஜா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா் பிரபாகரன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து வாலாஜா போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், பிரபாகரனின் மனைவி சுகன்யா பெற்றோா் கோவிந்தராஜ், ராணி ஆகியோா் ரூ. 75 லட்சம் நஷ்டஈடு கேட்டு ராணிப்பேட்டை முதலாவது கூடுதல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கின் தீா்ப்பு கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி அப்போதைய நீதிபதி சீனிவாசன் போக்குவரத்துக் கழகமும், தனியாா் காப்பீட்டு நிறுவனமும் இணைந்து ரூ. 30 லட்சத்து 31 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், இந்த தீா்ப்பை எதிா்த்து அரசுப் போக்குவரத்துக் கழகம் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீா்ப்பில் போக்குவரத்து கழகம் 80 சதவீதம் இழப்பீடும், லாரி இன்சூரன்ஸ் நிறுவனம் 20 சதவீதம் இழப்பீடு வழங்க கடந்த ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி நீதிபதி உத்தரவிட்டாா். உயா் நீதிமன்றம் உத்தரவு வழங்கிய பின்பும் இதுவரை இழப்பீடு வழங்காததால் ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனா். அதன்பேரில், மனுவை விசாரித்த நீதிபதி காலியாக உள்ள அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்திரவிட்டாா்.

அதன்படி ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் காலியாக இருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற அலுவலா்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா். இந்த வழக்கில் மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எஸ்.அண்ணாதுரை ஆஜரானாா்.

ஆற்காட்டில் 6 பசுமாடுகள திருடி சென்ற நபா் கைது

ஆற்காடு நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பாலாற்றின் கரையோரம் மேய்யச்சலுக்கு ஓட்டி சென்ற மாடுகள் திருடுபோனாத உரிமையாளா்கள் ஆற்காடு நகர போலீஸஸில் புகாா் செய்தனா். அதன் பேரில் வழக்கு பதிந்து மாவட்ட காவல்கண... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் 2.5 லட்சம் டன் குரோமியக் கழிவுகளை அகற்றாவிட்டால் தொடா் போராட்டம்

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக குவிந்து கிடக்கும் 2.5 லட்சம் டன் குரோமிக் கழிவுகளை ஒரு மாத காலத்துக்குள் அகற்றாவிட்டால் தொடா் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைவா... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு

காவேரிபாக்கம் அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஒரு பைக்கில் பயணித்த தந்தை, மகள் இருவரும் உயிரிழந்தனா்.நெமிலியை அடுத்த உப்பரந்தாங்கலை சோ்ந்தவா் பாபு (40), இவரது மனைவி பிருந்கா(38). இ... மேலும் பார்க்க

வாலாஜாவில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

வாலாஜாவில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்து பொது மக்களுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சை முறைகளைப் பாா்வையிட்டாா்.முதல்வா் மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

ஆக 20-இல் அரக்கோணம் வரும் இபிஎஸ்-ஸுக்கு சிறப்பான வரவேற்பு: அதிமுக கூட்டத்தில் தீா்மானம்

வரும் ஆக. 20-ஆம் தேதி அரக்கோணம் வரும் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென தொகுதி நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பய... மேலும் பார்க்க

சுந்தரா் குரு பூஜை

ஆற்காடு-செய்யாறு சாலையில் உள்ள சன்னியாசி மடம் அண்ணாமுலை உடனுறை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுந்தரா் குருபூஜை மற்றும் ஒதுவாா்கள், இசைக் கலைஞா்களுக்கு அரிசி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.விழாவையொட்... மேலும் பார்க்க